Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#RoadSafetyWorldSeries: டாஸ் வென்ற சச்சின்… ஆஸி. கலக்கல் பேட்டிங்…!!

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்  களமிறங்கவுள்ள ”சாலை பாதுகாப்பு கிரிக்கெட் உலக தொடர்” 2ஆவது சீசன் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.  இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஸ்ரீலங்கா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இந்தியா லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தன.

இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் VS ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ”ஷஹீத் வீர் நாராயண் சிங்” சர்வதேச மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஆஸ்திரேலியாவின் கேப்டன் செயின் வாட்சன் 30 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அதேபோல அலெஸ் டூலன் 35, பென் டங்க்,46 ரன்னும்  எடுக்க அந்த அணி தற்போதைய நிலையில் 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து ஆடி வருகிறது.  இந்திய அணியை பொறுத்தவரை ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். மழையால் ஆட்டம் தற்போது தடைப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |