வம்சி மீது விஜய் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் இயக்குனர் வம்சிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே வாரிசு படத்தை பார்த்து விட்டு நன்றாக இருப்பதாக விஜய் சொன்னதாக கூறப்படுகின்றது. மேலும் வாரிசு படத்திற்கு விஜய் கொடுத்த தேதிக்கு மேல் சூட்டிங் நீடிப்பதால் வம்சி மீது விஜய் வருத்தத்தில் இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளார்கள்.