பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளை முடித்துவிட்டு நடிகர்கள் சென்னை திரும்பியுள்ளார்கள்.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை வெளி மாநிலங்களில் முடித்துவிட்டு ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா உள்ளிட்டோர் இன்று சென்னை திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் ஊடக நிருபர்களை சந்தித்தார்கள்.
அப்போது கார்த்தி கூறியுள்ளதாவது, பல பேர் திரைப்படத்தை பார்ப்பதற்காக புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்கள். வெளிமாநிலத்தவர்களும் நம் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. முதலில் பான் இந்திய திரைப்படத்தை மணி சார் தான் ஆரம்பித்தார். அதனால் மணிசாரை அனைவருக்கும் தெரியும். அவர் நம்முடைய பெரிய அடையாளமாக இருக்கின்றார். ஏ.ஆர்.ரகுமானும் மணி சாரும் வரும்போது தமிழ்நாட்டில் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள். அதேபோலத்தான் வெளிமாநிலங்களிலும் இருக்கின்றார்கள் எனக் கூறியுள்ளார்.