Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபனாக பேசிய செங்கோட்டையன்…! எடப்பாடி பதில் சொல்லியே ஆகணும்… ADMKவில் புதிய புகைச்சல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அதிமுகவில்  எல்லா சமுதாயம் இருக்கிறார்கள். தேவர் சமுதாயம் இருக்கு, நாடார் சமுதாயம் இருக்கிறது, தேவர் சமுதாயம் இருக்குது, முதலியார் சமுதாயம் இருக்குது. எதற்காக செங்கோட்டையன் ஜாதி வெறியோடு பேசுகிறார்கள் ? பொதுக்கூட்டத்திலே ஜாதியை பற்றி பேசுபவர்கள், கவுண்டர்களை தவிர வேறு எந்த சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?

அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஜாதி வெறியோடு செயல்படுகிறார். அதை வெட்ட வெளிச்சமாக செங்கோட்டையன் வெளியே சொல்லுகிறார். அதனால் ஒரு ஜாதியை வைத்துக்கொண்டு அண்ணா திமுகவை அழிப்பதை, அண்ணா திமுகவில் இருக்கின்ற தொண்டர்கள் இனிமேலாவது எல்லாரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவர்களுடைய செயல்பாடு,  இவர்களுடைய எண்ணம் எப்படி இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு, ஜாதி வெறிபிடித்து அலைபவர்களை அடக்குவதற்கு அத்தனை சமுதாய மக்களும் ஜாதியெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அதிமுகவில் உழைப்பவர்களுக்கு தான் கட்சி என்கின்ற அடிப்படையில், எல்லா சமுதாய மக்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இது ஆபத்தான நிலைக்கு இந்த கட்சியை கொண்டு சென்று விடும்.

இப்படி பேசினால் பழங்குடியின மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், எல்லா சமுதாய மக்களுடைய எதிர்புக்கும் அண்ணா திமுக ஆளாகிவிடும். அதிமுகவை அழிப்பதற்கென்று இவர்கள் இன்றைக்கு செயல்படுவதை வன்மையாக கண்டிப்பதோடு, செங்கோட்டையன் சொல்லி இருப்பது போல எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜாதி வெறி பிடித்து கட்சியை நடத்துகிறீர்களா ? என்பதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |