பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற மேட்ச் வின்னிங் ஃபினிஷர் தேவை என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி நினைக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர்காக இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களது அணியும் வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அணி தேர்வு செய்துள்ள ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத ஒரு வீரராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.. ஏனென்றால் அவர் பேட்டிங், பௌலிங் இரண்டு துறையிலும் மிகச் சிறப்பாக தனது பங்களிப்பை அணிக்கு அளித்து வருகிறார்.. 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா 2018 ஆசிய கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பைக்கு பின்னர் முதுகில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதி அடைந்தார்.
அவரால் முழுமையாக பந்து வீச முடியாமல் பேட்டிங்கிலும் தடுமாறி வந்த நிலையில், துபாயில் நடைபெற்ற 2021 உலககோப்பை தொடரில் சுமாராகவே செயல்பட்டார். இதனால் இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் இதையடுத்து மனம் தளராமல் ஹர்திக் பாண்டியா 2022 ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டனாக நியமிக்கப்பட்டு, அந்த தொடரில் சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல் கோப்பையையும் வென்று கொடுத்தார்.
இதனால் பழைய ஃபார்முக்கு வந்த பாண்டியா இந்திய அணியில் நுழைந்து கம்பேக் கொடுத்து தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து நாடுகளுக்கும் எதிரான தொடரில் மற்றும் ஆசியக்கோப்பையில் முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியிலும் சிறப்பாக பினிஷிங் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா.
குறிப்பாக கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் 30 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார்.. அதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இக்கட்டான நிலையில் 2 பந்துகளில் 4 ரன்கள் தேவை என்றபோது பதட்டம் இல்லாமல் பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இப்படி ஹர்திக் பாண்டியா தவிர்க்க முடியாத வீரராகவும், இந்திய அணியின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வருகிறார். அதேபோல் உலகக்கோப்பையிலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.. இவரது ஆட்டம் குறித்து பலரும் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்டியா போன்ற மேட்ச் வின்னிங் ஃபினிஷர் தேவை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்..
அதாவது, ஆசிப் அலி, குஷ்தி ஷா, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் போன்ற வீரர்களை பாகிஸ்தான் நம்பியுள்ளது, ஆனால் அவர்களில் எவராலும் ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்குச் செய்தது போல் தொடர்ந்து அந்த வேலையைச் செய்ய முடியவில்லை என்று ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.பாகிஸ்தான் பேட்டிங் வரிசையில் எந்த மேட்ச்-வின்னரையும் கீழே பார்க்க முடியுமா என்று ஒரு செய்தி தொகுப்பாளர் கேட்டபோது, அந்த அணியில் (பாகிஸ்தான்) அத்தகைய வீரர் இல்லை என்று அப்ரிடி ஒப்புக்கொண்டார்.
பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியான சமா டிவிக்கு அப்ரிடி அளித்த பேட்டியில், பாகிஸ்தானுக்காக ஆசிப் அலி அல்லது குஷ்தில் போன்ற வீரர்கள் அந்த பாத்திரத்தை (பினிஷிங்) வகிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர், ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் செயல்பாடுகளுக்கு முரணாக இருக்கிறார்கள். முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் ஆகியோராலும் கூட நிலையாக நின்று அதை செய்ய முடியவில்லை.. எங்களுக்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் தேவை. நம்பிக்கையான ஒருவர்,பந்துவீச்சில் உதவுவைத்து மட்டுமின்றி போட்டியை வரிசையாக முடிக்க பொறுப்பேற்கிறார் என்றார்.
மேலும் எங்களிடம் (பாகிஸ்தான்) மேட்ச் ஃபினிஷர் யாரும் இல்லை என்று நினைக்கிறீர்களா?” என்று சமா டிவி தொகுப்பாளர் அப்ரிடியிடம் கேட்டார். அதற்கு அப்ரிடி, “நீங்கள் சொல்வது சரிதான். (ஹர்திக் பாண்டியாவைப் போல) எங்களிடம் அத்தகைய ஃபினிஷர் இல்லை. ஆசிப் அலி அல்லது குஷ்தில் ஷா அந்த வரிசையில் அசத்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் கூட நிலையாக இல்லை” என்று கூறினார்.