Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி… சீக்கிரம் தேர்தலை நடத்துங்க… சசி தரூர் வலியுறுத்தல்!

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்க்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் ராகுல் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கான இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகின்ற நிலையில், கட்சியின் தலைவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து நீடித்து கொண்டே வருகின்றது.

இந்தநிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் முன்னாள் தலைவரான சந்தீப் தீக்ஷித் ‘ காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகின்ற பெரும் பிரச்சினை முறையான தலைமைத்துவம் காணப்படாததே ஆகும் எனத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு கூடுதல் வலுச்சேர்க்கும் வகையில் சசி தரூர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் “சந்தீப் தீக்ஷித் வெளிப்படையாகக் கூறிய கருத்தையே  நாடு முழுவதும் இருக்கின்ற காங்கிரஸ் தலைவா்கள் மறைமுகமாகத் தங்களுக்குள் கூறிக் கொண்டிருக்கின்றனா்.

கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது. கட்சியின் தொண்டா்களை ஊக்கப்படுத்தவும், வாக்காளா்களைக் கவரவும் கட்சித் தலைமைப் பதவிகளுக்கான தோ்தலை செயற்குழு உடனடியாக நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Categories

Tech |