தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் பேசு பொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. செப்டம்பர் 6ஆம் தேதி ஆ ராசா திராவிட கழக நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றி பேசிய பேச்சை இந்துக்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக மடைமாற்றிவிட்டு சர்ச்சைகளை உருவாக்கினவர் இந்துத்துவ அமைப்பினர். பாஜக இதனை தனது அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது 20 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தை அணைத்து விடாமல் போராட்டம் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் எனக் கொண்டு செல்கின்றது பாஜக. இந்த நிலையில் திமுகவின் கொள்கை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பேசி எதிர்ப்பை கலங்கடிப்பவர்களில் ஆ ராசாவும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனும் முன்னிலையில் இருந்து வருகின்றார்கள்.
இதனாலேயே பாஜகவினரால் இவர்கள் இருவரும் அதிகம் விமர்சனம் செய்யப்படுகிறார்கள் மேலும் இவர்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. திமுக தலைமைக்கும் இவர்களுக்கும் இடைவெளியை உருவாக்கும் வேலைகளையும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் முன்னெடுகின்றன. பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கை மக்களிடையே அம்பலப்படுத்தி வரும் பழனிவேல் தியாகராஜன் பேச்சு வட இந்தியாவிலும் வீடியோ மூலமாக பரவிய நிலையில் அவரது வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசும் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். மேலும் மாநில அமைச்சரின் காரின் மீது செருப்பு வீசும் அளவிற்கு பாஜகவினர் இறங்கி இருக்கின்ற நிலையில் ஆ ராசா விவகாரத்தில் அவருக்கு எதிராகவும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை முதல்வர் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் கொடுத்ததாக சொல்கின்றார்கள்.
பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி ஆ ராசா தைரியம் இருந்தால் காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன் என மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளார் இதுபோல பல இடங்களில் இருந்தும் வந்த தகவலின் அடிப்படையில் தான் உளவுத்துறை முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்திருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னரே ஆராசாவிடம் முதல்வர் ஸ்டாலின் இப்போது நீலகிரி செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனால் அவருடைய நேற்றைய பயணம் ரத்தாகியுள்ளது. மேலும் ஆட்சியில் இருக்கும் போதே இதுபோன்ற பின் வாங்குவது எதிரிகளுக்கு உத்வேகத்தை தராதா என்ற பேச்சுக்கள் திமுகவினர் மத்தியில் எழுந்து இருக்கிறது ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். அதாவது அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத உணர்ச்சி அரசியல் சக்திகளோடு சரிக்கு சமமாக நின்றால் தான் இழுக்கு அதனால் ஒதுங்கி செல்வது தவறல்ல என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் இருக்கிறாராம். ஆனால் மீண்டும் மீண்டும் இதே போன்று நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தெரிவிக்கின்றார்கள்.