Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அடித்த 2 மணி நேரத்துக்கு…. மக்களே உஷாரா இருங்க… இது உங்களுக்கான எச்சரிக்கை ..!!

சென்னையில் ஆவடி, செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கேகே நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் தற்போது தொடர்ச்சியாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. முன்னதாக மிதமான மழை தொடரும் என சொல்லப்பட்ட நிலையில, தற்பொழுது கனமழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இந்த கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமான மழையாகவும்,  சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழையாகவும் பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் பெய்தது. தென்னிந்தியாவிலும்  கனமழை பெய்திருந்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை இல்லாமல் இருந்தது. இப்போது தென்மேற்கு பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பொழிந்து வருகிறது. இந்த கனமழை நாளைக்கும் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. 48 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கையாக முன்னதாக சொல்லி இருந்தார்கள். மிதமான மழை பரவலாக தொடரும், ஓரிரு இடங்களில் கன மழை தொடருவதற்கான வாய்ப்பு இருக்கிறது இப்போதைய நிலையில் 2 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |