கூட்டத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் குறைவாக கலந்து கொண்டதால் ஆத்திரமடைந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட பருவகால காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனால் தினமும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மேலும் இந்த காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முகாம்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று சென்னையில் உள்ள எலும்பூரில் அமைந்துள்ள சுகாதார பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது.
இந்த முகாம்களில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட காய்ச்சல் முகாம்கள் குறித்த செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஊழியர்களுக்கு எப்படி பயிற்சி வழங்குவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு நேரடியாகவும், காணொளி மூலமாகவும் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார். ஆனால் கருத்தரங்கத்தில் 50 செவிலியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம் கோபத்துடன் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.