தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா” அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ”பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” அமைப்பை சட்டவிரோத அமைப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து, அந்த அமைப்புக்கு இந்தியாவில் ஐந்தாண்டு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அந்த அமைப்பின் இணையதளம் தற்போது முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
பாப்புலர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் youtube, twitter, facebook, instagram உள்ளிட்ட சமூக வலைதளக பக்கங்களை முடக்கவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.