மெட்டா நிறுவனம் தற்போது வாட்ஸ் அப்பில் புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப் கேமராவில் போட்டோ எடுக்கும் வசதி மட்டுமே இருக்கும். ஒருவேளை வீடியோ எடுக்க வேண்டும் என்றால் கேமராவை நீண்ட நேரத்திற்கு டச் பண்ண வேண்டும். ஆனால் தற்போது வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் இரு வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை டிப்ஸ்டர் Wabetalnfo, Android 2.22.21.8 பீட்டா பதிப்பில் உள்ள பயன்பாட்டின் கேமரா மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முதலில் வாட்ஸ் அப் அப்டேட் கொடுக்க வேண்டும்.
இதேபோன்று வாட்ஸ் அப்பில் போன் செய்வதற்கும் எளிதான அணுகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப் குழு வீடியோ காலில் தற்போது 8 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். இதில் 32 பேரை ஒரே நேரத்தில் இணைக்கக்கூடிய விதமாக புதிய மாற்றம் கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் பிறகு வாட்ஸ் அப்பில் உள்ள ஸ்டேட்டஸ்களை யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் முறை இருப்பது போன்று, தங்களின் ஆன்லைன் நிலையை பார்ப்பவர்களின் பட்டியலையும் தேர்வு செய்யும் அம்சத்தையும் கொண்டு வந்துள்ளது. மேலும் குறிப்பிட்ட பதிவுகளுக்கு எமோஜிகள் மூலம் ரியாக்ஷன் அனுப்பு முறையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.