Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvENG : 2-2 சமம்….. இன்று 5ஆவது டி20 போட்டியில் வெல்வது யார்?

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது..

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.. இதில் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வென்ற நிலையில், 2-2 என்ற சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 5ஆவது டி20 போட்டி இன்று லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நான்காவது டி20 போட்டியில் வெற்றிக்கு மிக நெருக்கமாக இருந்த இங்கிலாந்து அணி கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

எனவே அதில் இருந்து பாடம் கற்பித்து இந்த போட்டியில் வெல்ல இங்கிலாந்து அணி முற்படும்.. அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியிலும் வெற்றிக்கு போராட அணி வீரர்கள் ஆயத்தமாக இருக்கின்றனர். அதனால் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை.. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

பாகிஸ்தான் உத்தேச அணி : 

1 பாபர் ஆசம் (கேப்டன்), 2 முகமது ரிஸ்வான் (வி.கே ), 3 ஷான் மசூத், 4 இப்திகார் அகமது, 5 குஷ்தில் ஷா, 6 ஆசிப் அலி, 7 ஷதாப் கான்/உஸ்மான் காதர், 8 ஷாநவாஸ் தஹானி, 9 முகமது ஹஸ்னைன், 10 ஹரிஸ் ரவுஃப், 11 முகமது வாசிம்.

இங்கிலாந்து உத்தேச அணி :

1 பில் சால்ட் (விகே ), 2 அலெக்ஸ் ஹேல்ஸ், 3 டேவிட் மலான், 4 பென் டக்கெட், 5 ஹாரி புரூக், 6 மொயீன் அலி (கேப்டன்), 7 சாம் கரன், 8 லியாம் டாசன், 9 கிறிஸ் வோக்ஸ், 10 அடில் ரஷித் , 11 மார்க் வூட்

Categories

Tech |