Categories
மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு பன்றி காய்ச்சல் …!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவம் முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியலானது சற்று முன்னதாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு என்ன காய்ச்சல் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது,

அவருக்கு எச்1,என்1 வைரஸ் ஆனது நேற்று பரிசோதனை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சாதாரண பன்றி காய்ச்சல் மட்டும் தான் இருக்கிறது என்றும்,  மேலும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையானது வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களில் காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கிறார்

Categories

Tech |