Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்பிக்கலாம்….. எப்படி தெரியுமா…?

இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் சீனியர் சிட்டிசன்கள்  ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது. இந்த ஆயுள் சான்றிதழை நவம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

எனவே ஓய்வூதியதாரர்கள் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம். மேலும் இந்திய மின்னஞ்சல் துறை வங்கி, இ-சேவை மையம், பொது சேவை மையங்கள், ஓய்வூதியதாரர்கள் நடத்தும் சங்கங்கள் மூலமாகவும் சமர்ப்பித்து கொள்ளலாம். அதோடு பேஸ் செயலியின் மூலமாகவும் ஆண்டு வாழ்நாள் சான்றிதழை பதிவு செய்து கொள்ளலாம். இந்நிலையில் பென்ஷன் வாங்கும் பெரும்பாலான முதியவர்கள் நேரடியாக சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதில் பல்வேறு விதமான இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.

இதன் காரணமாக அரசு வீட்டில் இருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பதற்கான நடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை ஓய்வூதியதாரர்களுக்கு இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருகிறது. அதாவது ஓய்வூதியதாரர்கள் 155299 என்ற இலவச தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டால் தபால்காரர் நேரடியாக வீட்டிற்கு வந்து ஆயுள் சான்றிதழை பெற்றுக் கொள்வார். இதற்கு கட்டண தொகையாக ரூபாய் 70 கொடுக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் இபிஎப்ஓ ஊழியர்கள் என அனைவருமே வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

Categories

Tech |