பிரிட்டன் மன்னர் சார்லஸ் தன் மகன் ஹாரி உடன் இருக்கும் பிரச்சனையை தீர்த்து விட முடியும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசன் சார்லஸ், மகாராணியாரின் மரணத்தை தொடர்ந்து நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து முதல் தடவையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் அவர் தன் மகன் இளவரசர் ஹாரி குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பை காட்டும் விதமாக பேசியிருக்கிறார்.
மேலும் மகாராணியாரின் மரணத்திற்கு பிறகு மகன் ஹாரி மற்றும் மேகனுடன் அவர் இருந்த தருணங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அரண்மனையை சேர்ந்த சிலர் கூறியிருக்கிறார்கள். தற்போது வரை மன்னருக்கு அவரின் இரண்டு மகன்கள் மீதான அன்பு அப்படியே இருக்கிறது என்று அரண்மனையை சேர்ந்த ஒரு நபர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், வருங்காலத்தில் ஹாரியின் குடும்பம் அரச குடும்பத்தினரோடு சேரும் என்னும் மிகப்பெரிய நம்பிக்கை இந்த 16 நாட்களில் ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். எனினும், அவர்களிடையே உள்ள பிரச்சனைகள் முழுவதுமாக தீரவில்லை. ஹாரி அடுத்ததாக வெளியிடும் புத்தகம் மேலும் பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது.