நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையேயான இரட்டை ரயில் பாதைகள் அடுத்த வருடம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் சார்பாக நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே மின்மயமாக்கப்பட்டலுடன் இரட்டை ரயில் பாதைகள் பணிகள் நடைபெறுகின்றது. தற்போது நல்லூரில் இருந்து நாங்குநேரி வரை மின்னமயமாக்க இருக்கின்றது. இதை ரயில்வே தென்சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் அதிகாரிகளுடன் சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
இதை அடுத்து மாலை மூன்று மணி அளவில் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் வரை அதிவேகமாக இயக்கி சோதனை மேல் கொண்டார். பின்னர் இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் மற்றும் அதிகாரிகள் பயணம் மேற்கொண்டார்கள். பின் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது, நாங்குநேரி-வள்ளியூர் இடையே அமைக்கப்பட்ட ரயில் பாதையில் 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது. சில இடங்களில் சிறுசிறு குறைகள் காணப்பட்டதால் அதை சரிசெய்ய உத்திரவிடப்பட்டு இருக்கிறது. நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே நான்கு கட்டபணிகளில் இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்து சோதனையோட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு பணிகள் நிறைவடைந்து இரட்டை ரயில் பாதை போக்குவரத்து தொடங்கும் எனக் கூறியுள்ளார்.