Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை ஏற்பட்டால்…. “புகார் மனு அளிக்க பாதுகாப்பு பெட்டி”…. ஆட்சியர் தகவல்….!!!!!

வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் புகார் பெட்டியில் மனு அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பாதுகாப்பு பெட்டியை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டால் அது தொடர்பான புகாரை பாதுகாப்பு பெட்டியில் போடலாம்.

பாதுகாப்பு பெட்டிக்குள் புகார் மனு போடப்பட்டால் உடனடியாக குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்து பெட்டி திறக்கப்படும். இந்த பாதுகாப்பு பெட்டி ஒரு சாவி குழு தொழிலாளர் உறுப்பினரிடமும் மற்றொரு சாவி புகார் குழு சமூக அமைப்பு சார்ந்த உறுப்பினரிடமும் இருக்கும். கொடுக்கப்படும் புகார்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகாரானது குழு உறுப்பினர்களின் முன்னிலையில் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டு உரிய விசாரணை செய்யப்படும். இதனால் அனைத்து பணியிடங்களிலும் பாதுகாப்பு பெட்டி அமைத்திட வேண்டும். மேலும் மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் உள்ளக குழுவின் விசாரணை திருப்தி அளிக்காத வகையிலோ மகளிர் சுய உதவி எண் அல்லது ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |