Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிம்பு படத்தில் இடம்பெற்ற “மல்லி பூ பாடல்”…. வைரலாகும் வீடியோ…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் வேல்ஸ் இன்டர் நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்துகிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு ஒரு சொகுசு கார் மற்றும் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக வழங்கினார். இதைத்தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு நல்ல பிரமோஷன் செய்த கூல் சுரேஷ்க்கு ஒரு ஐபோனையும் பரிசாக வழங்கினார். மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லி பூ என்ற பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது பாடலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Categories

Tech |