Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவில் தமிழன் NO 1…. ஆனால் தைரியம் கிடையாது…. சுப்ரமணியசாமி தகவல்

பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, இந்தியாவில் தமிழன் இன்றைக்கு மூளையில நம்பர் 1. ஆனால் தைரியம் கிடையாது. இது என்னோடது, நான் எனக்காக சொல்லுறேன். வடநாட்டில் சென்று போராட்டம் செய்தாலும் செய்வேன், அதெல்லாம் கிடையாது. என்னிடம் நிறைய பேர் வடநாட்டில் சொல்வார்கள்.

நீ உண்மையாகவே தமிழா என்று ? நீங்கள் இவ்வளவு தகராறு செய்கிறீர்கள், தமிழன் எல்லாம் இப்படி இருக்க மாட்டார்கள் ( தைரியமாக) சொன்னதை கேட்பார்கள். ஆனால்  நீங்கள் எல்லாவற்றிலும் ( தைரியமாக )  தகராறு செய்கிறீர்கள் என்று..

இப்படி தமிழனுக்கென ஒரு ரூபம் கொடுத்திருக்கிறார்கள். எனவே புதிதாக ஒரு தமிழனை உருவாக்க வேண்டும், தைரியமாக இருக்கும் தமிழனை உருவாக்க வேண்டும். ஆனால் அதே தைரியத்தோடு வெற்றி பெற வேண்டும். தமிழர்களுக்குள் எந்த வித்தியாசம் கொண்டு வரக் கூடாது. சமஸ்கிருதத்தில் ஆரியன் என்று ஒரு வார்த்தை கிடையாது.

இது ஜெர்மனியிலிருந்து வந்தது, வெள்ளைக்காரன் நம் மீது போட்டார்கள், அவர்கள் நம்மை பிரிப்பதற்காக பார்த்தார்கள். அதனால் வடநாடு ஆரியன், கங்கைநாடு  திராவிடர். என வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள். அதை தான் தமிழகத்தில் இன்றைக்கு சொல்கிறார்கள். இதுபற்றி இப்போது கண்ணா பின்னாவென்று பேச ஆரம்பித்து விட்டார்கள் என வேதனை தெரிவித்தார்.

Categories

Tech |