Categories
மாநில செய்திகள்

ஏழை மக்களுக்கு அரசு பேருந்து…. வசதி படைத்தவர்களுக்கு ஆம்னி பேருந்தா….? அமைச்சர் சொல்ல வரும் கருத்து தான் என்ன….?

இந்தியாவில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்து ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுதுகிறது. இந்த குற்றச்சாட்டு ஒவ்வொரு பண்டிகையின் போதும் பயணிகளால் முன்வைக்கப்படுகிறது.

இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுப்பதற்கு அரசு பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை http://www.aoboa.co.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுவதால் முன்கூட்டியே கட்டணத்தை தெரிந்து கொள்வதற்காக இணையதள வசதி தொடங்கப்பட்டதாக ஆம்னி பேருந்து சங்கங்கள் கூறியுள்ளது. அதன் பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, அரசு பேருந்துகளின் கட்டணத்தோடு ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். அரசு பேருந்துகள் மக்களின் சேவைக்காக இயங்குகிறது. .அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை.

இதுதான் இந்தியா முழுவதுக்கும் நிலை. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக தமிழக அரசு பேருந்து சேவையை வழங்குகிறது. ஆனால் கூடுதல் சேவையை எதிர்பார்ப்பவர்கள் ஆம்னி பேருந்தை எதிர்பார்க்கின்றனர். ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண வரம்பு கிடையாது. இருப்பினும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துகிறோம். தமிழக அரசின் சார்பில் 21,000 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தனியார் பேருந்துகளில் அதன் கட்டணத்தை முன்கூட்டியே தெரிந்தும் அதில் பயணிப்பவர்கள் தான் அதிகம்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் பண்டிகை காலங்களில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. அதாவது அமைச்சர் கூறியது ஏழை, எளிய மக்கள் என்றால் அரசு பேருந்திலும், வசதி படைத்தவர்கள் ஆம்னி பேருந்துகளிலும் செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பணிகளை மதிக்காததால் தான் தனியார் பேருந்துகளை நாடுவதாக கூறுகிறார்கள்.

Categories

Tech |