Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜடேஜாவ மிஸ் பண்ணல…. “ஏன்னா அக்சர் இருக்காரு”…. ஆனா இந்த ஒன்னுல அவருதான் கிங்…. முன்னாள் வீரர் சொன்னது என்ன?

ஜடேஜாவின் பீல்டிங் இடத்தை அக்சர் பட்டேலால் நிரப்ப முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்..

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை இந்தியா  உட்பட அனைத்து நாடுகளும் அறிவித்தது. இதில் இந்திய அணியில் ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறவில்லை.. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகிய ஜடேஜா உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. ஜடேஜா இந்திய அணிக்கு இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்று ரசிகர்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் பேட்டிங், பவுலிங், பில்டிங் என 3 விதத்திலும் அவர் மிகச் சிறப்பாக செயல்பட கூடியவர்.. எனவே அவரது இடத்தை நிரப்பும் வகையில், ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் பட்டேல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.. தற்போது அக்சரும் மிகச் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறார்.. நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 தொடரில் சிறப்பாக பந்து வீசி உள்ளார்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி 8 ஓவராக நடைபெற்று போது 2 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. அதேபோல முதல் மற்றும் 3ஆவது டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.. ஒட்டுமொத்தமாக அந்த தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.. அதேபோல இவர் பேட்டிங்கும் சிறப்பாக ஆடுகிறார்.. கடைசி நேரத்தில் சிக்ஸர் அடிக்கும் திறமை இவருக்கு உண்டு..

எனவே கிட்டத்தட்ட ஜடேஜாவை போலவே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்… ஆனால் என்ன பீல்டிங் மட்டுமே அவருக்கு சற்று குறைவாக இருக்கிறது.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கூட 2 கேட்சிகளை கோட்டை விட்டது விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட, அவரது பந்துவீச்சில் எந்தவித குறையும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கிட்டத்தட்ட அனைத்து பவுலர்களின் ஓவரும் அடி விழும் போது இவர் மட்டுமே சிறப்பாக வீசினார் என்பதே உண்மை..

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியதாவது, 2022 ஆசியக் கோப்பையின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவிற்குப் பதிலாக சேர்க்கப்பட்ட ஆல்ரவுண்டர் அக்சர் படேல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே தனது திறமை, தகுதியை நிரூபித்து விட்டார்.. கிடைத்த வாய்ப்பை அருமையாக அக்சர் பட்டேல்  பயன்படுத்தியுள்ளார்.. ஜடேஜாவை அனைவரும் மிஸ் செய்தோம், ஆனால் பந்துவீச்சு அம்சத்தில் யாரும் அவரைத் மிஸ் செய்யவில்லை. ஏனென்றால் அக்சர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வலு சேர்க்கிறார். அதோடு அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். இருப்பினும் அவருடன் (ஜடேஜா) ஒப்பிட முடியாதது பீல்டிங் மட்டுமே” என்று அவர் கூறினார்.

Categories

Tech |