Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து : மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரங்கல்..!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை  பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிப்.,7ஆம் தேதி முதல் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த ராட்சத கிரேனில் சிக்கி, 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Image

இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன்  உருக்கமாக இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இதயம் நொறுங்கியது.. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் & மீதமுள்ளவர்கள் விரைவாக மீண்டு வர விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர் கமல் கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு கமல் ரூ 1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |