நாடு முழுவதும் செல்வாக்கு இல்லாத தொகுதிகளை கண்டறிந்து பாஜக, மத்திய அமைச்சர்களையும், மேல்மட்ட தலைவர்களையும் அனுப்பி வேலை செய்கிறார்கள், அதன்படி தமிழகத்திற்கு வந்த ஜெ.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து பேசியது தொடர்பான கருத்து கூறிய சீமான்,
ஒரே ஒரு கல்லு நட்டு இருந்தாங்க செங்கல்லு. அதையும் நம்ம தம்பி உதயநிதி எடுத்துட்டு வந்துட்டாரு. இன்னைக்கு வந்து நீங்களே பாருங்க. ஐயா அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டினார்கள். எத்தனை வருஷம் ஆகிடுச்சு பாருங்க ? சும்மா ஒரு பேச்சு அளவில் தாங்க எய்ம்ஸ் மருத்துவமனை. எப்படி அபட்டமா பொய் சொல்றாங்க பாருங்க 90 சதவீத பணிகள் முடிஞ்சிட்டு அப்படின்னு…
எல்லா கட்சிகளுமே தேர்தல் வெற்றியை நோக்கி தான் குறி வைப்பாங்க. அதுல அவங்க தமிழ்நாட்டை குறி வைத்து கர்நாடகா வரைக்கும் வந்துட்டாங்க. ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு அவங்க வரணும்னு நினைக்கிறாங்க. அதுக்கு அவங்க மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் எல்லாரும் வந்து படையெடுத்து வேலை செய்றாங்க. பார்ப்போம் என்ன வருதுன்னு ? பாப்போம் ?
தாம்பரம் திமுக MLA ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது குறித்து பேசிய சீமான், யாரு நடவடிக்கை எடுப்பா ? நீங்க எல்லாரும் திராவிட மாடல் அப்படின்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டு போகணும் என தெரிவித்தார்.