மலேசிய தொழில் அதிபரான தனது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள தனது இல்லத்திற்கு வருகை தர மலேசியா உள்துறை மந்திரிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மலேசியா உள்துறை மந்திரி டத்ட்ஜோ ஹம்சா பின் ஜெயினுதீன் புலம்பாடிக்கு வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மலேசியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தாராளமாக வரலாம் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வயது வரம்பு 45 ஆக இருப்பதை மாற்றி அமைக்க பேச்சுவார்தை நடத்தப்பட உள்ளது. அதனை போல மலேசியா நாட்டில் 20 ஆண்டுகள் தங்குவதற்கு இன்வெஸ்ட்மென்ட் விஷா என்று அழைக்கப்படும் பிரீமியம் விசா எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தகுதியானவர்கள் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.