இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.அப்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்காக நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை முன்னிட்டு இந்திய ரயில்வே சிறப்பு மெனு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.அதாவது நவராத்திரியின் போது ரயில்களில் பயணிக்கும் பக்தர்களுக்காக இந்த ஸ்பெஷல் மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மெனு அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் நவராத்திரிக்கான சிறப்பு உணவுகளை https://www.ecatering.irctc.co.in/என்ற இணையதளம் மூலமாக ஆர்டர் செய்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே பயணிகளுக்கு அறிவித்துள்ளது.
நவராத்திரியின் சிறப்பு மெனுவில், பரோட்டா, ஆளு சாப், ஜவ்வரிசி டிக்கி, ஜவ்வரிசி கிச்சடி, ஜவ்வரிசி கித்ரி நவராத்திரி தாலி, பனீர் மக்மாலி, கோப்தா கறி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதன் விலை 99 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.ஐ ஆர் சி டி சி நிறுவனத்தில் இ- கேட்டரிங் வசதி உள்ள ரயில்களில் மட்டுமே இந்த நவராத்திரி சிறப்பு உணவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் முறை?
இதற்கு முதலில் https://www.ecatering.irctc.co.in/என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் ரயிலின் PNR நம்பரை பதிவிட வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு விருப்பமான உணவை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம்.பின்ன ரயிலில் உங்கள் இருக்கைக்கு நேரடியாக உணவு டெலிவரி செய்யப்படும்.