Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கன்டிஷனா?… திருமண நிகழ்ச்சியில் ஆதார் இருந்தா மட்டும் தான் சோறு…. ஷாக் நியூஸ்….!!!!

திருமண நிகழ்ச்சியில் ஆதார் அட்டை கொண்டுவந்தவர்களுக்கு மட்டும் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் போட்டோ ஷூட், உணவு, அலங்காரம் என அனைத்து ஏற்பாடுகளிலும் புதுமையை காட்டி உறவினர்களின் கவனத்தை மணமக்கள் வீட்டார் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் வித்தியாசமான அணுகுமுறையால் நாட்டு மக்களின் கவனத்தை ஒரு திருமணம் ஈர்த்து இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் உணவு அரங்கிற்குள் ஆதார் அட்டை காட்டும் விருந்தினர்களை மட்டுமே பெண் வீட்டார் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு வழங்கப்படாததால், பலரும் எரிச்சலுடன் திரும்பிச்சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி பெண் வீட்டார் தரப்பில் கூறியதாவது, அந்த மண்டபத்தில் சகோதரிகள் 2 பேருக்கு ஒரேநாளில் திருமணம் நடைபெற்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆதார் இருப்பவர்களை மட்டும் அனுமதித்ததாக தெரிவித்தனர். அத்துடன் இந்த திருமணத்தில் நடைபெற்ற சம்பவத்தை வீடியோ எடுத்த சில விருந்தினர்கள் சமூகஊடகங்களில் அதை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |