இந்தியாவின் தனியார் வங்கியாளர் பெடரல் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.இதனை தொடர்ந்து புதிய ரேட்டில் பொது வாடிக்கையாளர்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களில் மூன்று சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுவதாக பெடரல் வங்கி அறிவித்துள்ளது.
அதேசமயம் சீனியர் சிட்டிசனுக்கு 3.50 சதவீதம் முதல் 6.65 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதில் அதிகபட்சமாக 700 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு சதவீதமும் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.50 சதவீதம் பட்டியும் வழங்கப்பட உள்ளது.
புதிய வட்டி:
7 – 29 நாட்கள் : 3%
30 – 45 நாட்கள் : 3.25%
46 – 60 நாட்கள் : 3.75%
61 – 90 நாட்கள் : 4%
91 – 119 நாட்கள் : 4.10%
120 – 180 நாட்கள் : 4.25%
181 – 332 நாட்கள் : 4.80%
333 நாட்கள் : 5.60%
334 நாட்கள் – 1 ஆண்டு : 4.80%
1 ஆண்டு : 5.60%
1 ஆண்டு – 20 மாதம் : 5.60%
20 மாதம் : 6.10%
20 மாதம் – 699 நாட்கள் : 5.60%
700 நாட்கள் : 7%
701 – 749 நாட்கள் : 5.75%
750 நாட்கள் : 6.50%
751 நாட்கள் – 3 ஆண்டுகள் : 5.75%
3 – 5 ஆண்டுகள் : 6%
5 ஆண்டு – 2221 நாட்கள் : 6%
2222 நாட்கள் : 6.20%
2222 நாட்களுக்கு மேல் : 6%