இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதில் 12 இலக்க தனித்துவமான எண்கள் கொண்ட அடையாள அட்டை முக்கியமானதாகும். சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது.இந்தியாவில் இதுவரை 130 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் ஆதார் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
ஆதார் கார்டில் 12 இலக்க எண், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து சுய விவரங்களும் இடம்பெற்று இருக்கும்.அது மட்டுமல்லாமல் ஆதார் கார்டின் பின்புறம் க்யூ ஆர் கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும். இது எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது பெரும்பாலானவருக்கும் தெரிவதில்லை. ஆதார் கார்டில் உள்ள கியூ ஆர் கோடில் உங்களின் பெயர், முகவரி, பிறந்தநாள், பாலினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும்.
அதேசமயம் ஆதார் கார்டில் பதிக்கப்படாத இமெயில் மற்றும் மொபைல் நம்பர் ஆகிய விவரங்களும் இந்த qr கோடில் பதிவாகியுள்ளது. இதில் உள்ள விவரங்களை பார்த்து தெரிந்து கொள்வதற்காக ஆதார் ஆணையம் aadhaar QR Scanner என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலி மூலமாக உங்கள் ஆதார் கார்டில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் உங்களின் பெயர் மற்றும் பிறந்த தினம் உள்ளிட்ட அனைத்து சுய விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.