Categories
மாநில செய்திகள்

“வெள்ளிக்கிழமை ஆஜராக இருக்கும் டிடிஎஃப் வாசன்”… காவல்துறை வட்டாரம் தகவல்…!!!!!

கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்பவர் Twin throttlers என்ற youtube சேனல் நடத்தி வருகின்றார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றார். இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சேர்ந்த மரக்கடை அதிபரும் ஜி பி முத்துவை சந்தித்த டிடிஎஃப் வாசன் அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்றுள்ளார். அப்போது ரைடுக்கு கிளம்பும் முன் வாசலின் பைக்கை பார்த்து ஜி பி முத்து இதில் பிடிமானம் கூட இல்லையே எனக் கூற என்னை பிடித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதன் பின் நீண்ட நாட்களாக இருவரும் சந்திக்க விரும்பியதாக தெரிவித்து கன்னத்தில் முத்தமிட்டு கொள்கின்றனர்.

அதனை தொடர்ந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் பைக்கில் செல்ல முடிவெடுத்து இருக்கின்றனர். இந்த நிலையில் வாகன நெருக்கடி நிறைந்த சாலையில் 150 கிலோமீட்டர் மேலான வேகத்தில் டிடிஎப் வாசன் ஜி பி முத்துவிற்கு மரண பயத்தை காட்டுகின்றார். இதனால் ஜி பி முத்து கதறுவதை காமெடியாக டிடிஎப் வாசன் எடுத்துக் கொள்கின்றார். எதிர் திசையில் வாகனங்கள் வருகின்ற நிலையில் கையை விட்டு வேகமாக ஓட்டும் நிலையில் ஜிபி முத்து ஹெல்மெட் கூட அணியாமல் பின்னாடி அமர்ந்துள்ளார். இதனை பார்த்து நெட்டிசன்கள் பலரும் சாலை விதிகளை மீறும் இவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து டிடிஎப் வாசன் மீது போத்தனூர் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் டிடிஎஃப் வாசனை தேடி வந்த சூழலில் நேற்று மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்துள்ளார். நேற்று காலை 10:30 மணிக்கு சரணடைந்த வாசன் ஐந்து முப்பது மணி வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்தார். இந்த நிலையில் இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். போத்தனூர் வழக்கில் சரணடைந்த நிலையில் சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் வருகின்ற வெள்ளிக்கிழமை டிடிஎச் வாசன்  ஆஜராக இருப்பதாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |