Categories
சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது….. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவைச் சேர்ந்த திரை உலக பிரபலங்களுக்கு மத்திய அரசால் வருடம் தோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது சிவாஜி கணேசன், கே. விஸ்வநாத், கே.பாலச்சந்தர், லதா மங்கேஷ்வர், ராஜ்கபூர், எல்.வி பிரசாத், நாகிரெட்டி, பிருத்திவிராஜ் கபூர், சத்யஜித் ரே உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கண்ணா ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு வருடத்திற்கான  தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பழம்பெரும் ஹிந்தி நடிகையான ஆஷா பரேக்குக்கு விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஆஷா கடந்த 1959-ம் ஆண்டு தில் தேகே தேகோ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கர்கி இசத், அந்தோலன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகை ஆஷாவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Categories

Tech |