வாயுத்தொல்லையால் எவ்வளவு தான் அவதிப்படுவார்கள்.. அதாங்க உங்களுக்காக எளிமையா ஒரு டிப்ஸ்.. ட்ரை பண்ணி பாருங்க..!
நிறைய பேருக்கு வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல், வயிறு குத்துவது, தொடர் ஏப்பம், வாயு வெளியேற்றம் இன்மை, இதுபோன்ற பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுவார்கள். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்றால் செரிமானத்தின் போது உதவக்கூடிய வாயுதான்.
இந்த வாயு உடலில் அதிகமாகும் பொழுது தான், வாயுத்தொல்லை பிரச்சனை உருவாகிறது. குறிப்பாக உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்பவர்கள் தான் இந்த வாயுத் தொல்லை பிரச்சினையால் அவதிப்படுவார்கள். பலரையும் கவரக்கூடிய இந்த வாயு தொல்லை, எப்படி உடனடியாக சரி பண்ணுவது என்பதை பாக்கலாம்…
வாயு தொல்லை குணமாக வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:
ஓமம் – 50 கிராம்
கட்டி பெருங்காயம்- 50 கிராம்
முதலில் 50 கிராம் கட்டிப் பெருங்காயத்தை எடுத்து பொடியாக உடைத்துக் கொள்ள வேண்டும். உடைத்த கட்டிப் பெருங்காயத்தை ஒரு வாணலியில் போட்டு நன்றாக வறுத்து எடுக்கவேண்டும். நன்றாக பொரிந்து வரும், ஆயில் எதுவும் சேர்க்காமல் வறுத்து எடுக்க வேண்டும்.
அடுத்து இந்த ஓமத்தையும் அதே வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸியில் போட்டு நல்லா பவுடர் பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஓமம் மற்றும் காயம் சேர்த்து எடுத்த இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு கிளாஸ் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் நல்லா சூடானதும், அதில் பொடித்து வைத்திருக்கும் காயம் மற்றும் ஓமம், போட்டு நன்றாக கரையும் வரை கலக்க வேண்டும்.
இதை பருகுவதால் ஏற்படும் நன்மை:
தினமும் இருவேளை குடித்து வந்தாலே போதும். வாயுவை உடலில் இருந்து உடனடியாக வெளியேறுவதை நீங்களே பார்க்க முடியும். வாயு பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்..
எந்த விதமான பக்கவிளைவும் இருக்காது.. இந்த வாயு தொல்லைக்கு அடிப்படை காரணம் என்னவென்றால் மலம் சரியாக வெளியேறாமல் இருப்பதுதான். இதற்கு காரணம் தினமும் காலையில் நன்றாக மலம் கழித்துவிட்டால் இந்த வாயு பிரச்சனை இருக்காது.
தினமும் மாலையில் சிவப்பு கொய்யா ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது. வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இரண்டு விஷியங்களையும் செய்து பாருங்கள்..கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்..