சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல சரவணபவன் ஹோட்டலில் ஏசி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சரவணபவன் ஊழியர்களான மணிகண்டன், கிரீஷ்குமார், பாலமுருகன், ஆனந்தமுருகன் ஆகிய 4 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கலவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.