Categories
சினிமா

“என் மகனுக்கு இப்படி ஒரு நோய் இருந்துச்சு”…. சீரியல் நடிகை கனிகாவின் உருக்கமான பதிவு….!!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தவர்தான் நடிகை கனிகா. இவர் மிஸ் சென்னை எனும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதால் திரையுலகில் நுழைய ஒரு காரணமாக இருந்தது. கடந்த 2002ஆம் வருடம் 5 ஸ்டார் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்தது இவர்தான்.

திரையுலகில் தற்போது அவருக்கு வாய்ப்பு குறைய சீரியலில் களமிறங்கியுள்ளார். அதன்படி இப்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். ஷ்யாம் என்பவரை சென்ற 2008ம் வருடம் திருமணம் செய்த கனிகாவுக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். முன்னதாக “எனது மகன் பிறந்த போது என்னிடம் காட்டவில்லை. குழந்தையின் இருதயத்தில் பிரச்சனை உள்ளது.

இன்று இரவுவரை என் மகன் உயிரோடு இருக்கமாட்டான் என கூறினர். ICU-ல் எனது மகனை பார்த்ததும் என மனம் இரண்டாக உடைந்தது. அதன்பின் 7 மணி நேர ஆபரேஷனுக்கு பின் என் மகனை பிழைக்க வைத்துவிட்டார்கள்” என்று கனிகா கூறினார். இதனால் இன்றுவரை எனது மகனை பத்திரமாக பார்த்து வருகிறேன் என தனது வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் பற்றி அவர் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |