Categories
மாநில செய்திகள்

என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க?…. “திடீர்னு மேடையிலிருந்து கிளம்பிய அமைச்சர்”….. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. என்ன நடந்தது?

ஏற்பாடுகள் சரியில்லை என்று அரசு நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீரென புறக்கணித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படக்கூடிய காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் வகையிலும், அதே போல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் இன்று காலை 10 மணி அளவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. சுமார் 1000 பேர் அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை  பணியாளர்கள் உட்பட சுமார் 500 முதல் 1000 பேர் வரை பங்கேற்பார்கள் என்பது போல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 பேர் வரை மட்டுமே அங்கு அழைக்கப்பட்டிருந்ததன் காரணமாக, அந்த நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்த்தாய் வாழ்த்து நிறைவடைந்த உடன் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, இது என்ன ஒரு பெயரளவிற்கு தான் நீங்கள் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. அதனால் நான் கிளம்புகிறேன் என்று அதிகாரிகளிடம் கோபமாக பேசிவிட்டு வெளியேறினார்..

அதிகாரிகள் அவரை சமாதானம் செய்ய முயன்ற போதும் அவர் இல்லை, பெயரளவில் நடத்தப்படுகின்ற இந்த கூட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். அது ஒரு சின்ன ஹால் அந்த ஹாலில் எப்படி அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எப்படி அசம்பிள் செய்து நடத்த முடியும் என்பதால் தான் இந்த கூட்டத்தை சின்ன அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் தான் நாங்கள் சின்ன அளவில் ஏற்பாடு செய்தோம், மற்ற அனைவருக்குமே காணொளி காட்சி மூலமாக (வீடியோ கான்பரன்ஸ்) செய்து கொள்ளலாம் என்று வைத்திருந்தோம். அதற்கு முன் இப்படி ஆகிவிட்டது, விரைவில் இந்த கூட்டத்தை மறுபடியும் அமைச்சரை அழைத்து பெரிய அளவில் நடத்துவோம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்..

Categories

Tech |