ராஜஸ்தானில் வேகமாக வந்த கார் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள மாணவர்கள் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கார் சதார் காவல் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு ட்ரக்குகள் மீது மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த காவலாளி உட்பட காரில் பயணித்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான விசாரணையின் உயிரிழந்த மாணவர்கள் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் விபத்தில் பலியான காவலாணியின் உறவினர்கள் காரை வேகமாக ஓட்டியவர் மீது புகார் அளித்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.