தாங்கள் ஒரு சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம் கொடுக்கின்றோம் என்பது தெரியாமல் ஒருவருக்கு உதவ முன்வந்தால் சிக்கலுக்குள்ளாகிய இலங்கை அகதிகளை நினைவு இருக்கலாம். 2016 ஆம் வருடம் Snowden என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனை பற்றிய படமாகும். அந்தப் படத்தில் எட்வர்டுக்கு ஹொங்கொங்கின் சட்டதரணி ஒருவரும் இலங்கை அகதிகள் சிலரும் உதவும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அந்த அகதிகள் சிக்கலுக்கு அழகியுள்ளனர். மேலும் உலக அளவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய எட்வர்ட் அமெரிக்கா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது அவர் ஹொங்கொங்கிலிருந்து தப்பித்து ரஷ்யாவிற்கு சென்று அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார்.
அமெரிக்கா எது செய்தாலும் அதற்கு எதிராக எதையாவது செய்யும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அமெரிக்க உளவாளியான எட்வர்டுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார். 2020 ஆம் வருடம் ரஷ்யா ஸ்னோடெனுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கி இருந்த நிலையில் நேற்று அவருக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. உளவு பார்த்த குற்றத்திற்காக ஸ்னோடெனை அமெரிக்காவிற்கு கொண்டு வந்து விசாரிக்க அமெரிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வந்த நிலையில் உக்ரைன் போரில் அமெரிக்கா முதலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருவதால் எரிச்சல் அடைந்திருக்கும் புடின் அமெரிக்காவிற்கு எரிச்சலூட்ட அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியான ஸ்னோடெனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கியிருக்கிறார். மேலும் ஸ்னோடன் அமெரிக்காவிடம் சிக்கினால் அவர் மீதான உளவு பார்த்தல் முதலான குற்றச்சாட்டுகளுக்காக அவர் 30 வருடங்கள் சிறையில் செலவிட என்பது குறிப்பிடத்தக்கதாகும்.