Categories
பல்சுவை

கூலாக படுத்துக்கிடக்கும் கும்கி யானை…. சுட்டி சிறுவர்களின் அழகிய செயல்…. வைரல் புகைப்படம்….!!!!

அண்மை காலமாக யானைகள் செய்யக்கூடிய குறும்புசேட்டைகள் பல்வேறு இணைய வாசிகளை கவர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதே போன்று ஒரு கும்கி யானையின் அழகியசெயல் வீடியோவானது இணையத்தளத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்திலுள்ள டாப்ஸ்லிப் சிறந்த சுற்றுலாதளமாக திகழ்ந்து வருகிறது.

இங்கு அடர்ந்த வனப் பகுதியிலுள்ள முகாமில் வளர்ப்புயானைகள், கும்கியானைகள் உட்பட 27 யானைகள் வனத்துறையினர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்பட்டு வரும் கும்கியானைகளை கொண்டு ஊருக்குள் புகுந்து அட்டூழியம் செய்யும் காட்டுயானைகளை விரட்டுதல் (அல்லது) பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்த்து வனப் பகுதியில் ரோந்து செல்லும் பணிகளுக்கும் பயிற்சிபெற்ற கும்கி யானைகளை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு பராமரிக்கப்படும் யானைகளை தினசரி முகாம் அருகேயுள்ள ஆற்றில் யானைபாகன் குளிக்க வைத்து உணவு கொடுப்பது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இப்போது அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் 38 வயதுள்ள மாரியப்பன் என்கிற கும்கி யானையை அங்குள்ள ஆற்றில் குளிக்க வைக்கும் காட்சி வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அந்த யானை தண்ணீரில் படுத்துகிடக்கும் காட்சியானது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Categories

Tech |