Categories
அரசியல் மாநில செய்திகள்

அநியாயம், அக்கிரமம்…! பாஜக தலைவரா எப்போ வந்தாரோ…. அப்பே இருந்தே யாரையும் மதிக்கல… அண்ணாமலை மீது கடும் பாய்சல் ..!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான்.

அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை,  தலைமைகளை,  ஜனநாயக சக்திகளை மிக மோசமாக, மிக நாகரிகமாக,  மிக ஒருமையில், மிக அவதூறான கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறான். எங்கள் சட்டம் மனுதர்ம சட்டம், எங்கள் சட்டம் பூணூல் சட்டம், எங்கள் சட்டம் மனு ஸ்ருமிதி சட்டம் என்பதன் அடிப்படையில், அரசியல் சட்டத்தையே காலில் போட்டு மிதித்து, அகம்பாவத்துடனும், அதிகார திமிருடன், ஆணவத்துடனும் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய ஆளுநராக பணி செய்து கொண்டிருக்கிறார்.

அந்த அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். எங்களுடைய சங்கீ தனத்தை தோலுரித்துக் காட்டுகிற, சமதர்ம சமுதாயத்திற்காக போராடுகிற, சமூக நீதிக்காக போராடுகின்ற,  சமத்துவத்துக்காக போராடுகிற, எந்த ஒரு இஸ்லாமிய சகோதரனையும் நாங்கள் எங்கள் இடத்தில் இருக்கின்ற அதிகாரம் பொருந்திய NIA என்கின்ற ஒன்றிய அரசின் புலனாய்வை கொண்டு நாங்கள் தூக்கி செல்வோம் என பாஜக செயல்படுவதாக தெரிவித்தார்.

Categories

Tech |