Categories
உலக செய்திகள்

“CUT, COPY,PASTE “… தந்தை லாரி டெஸ்லர் காலமானார்.!!

கணினி உலகின் வரப்பிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் (cut, copy, paste) செயல்பாடுகளை உருவாக்கிய விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் லாரி டெஸ்லர் (Larry Tesler). 74 வயதான இவர் ஜெராக்ஸ் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்து அசத்தியவர். மேலும் கணினி உலகின் வரபிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளையும் இவர்தான் உருவாக்கியுள்ளார்.

Image

அந்த வகையில் இன்று நாம் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் ப்ரவுசரை (Browser) உருவாக்கி கணினி மயமாக்கலுக்கு மிகப்பெரும் பங்காற்றியுள்ளார். இந்த நிலையில் இவர் உடல் நலக்குறைவால் காலமானார். கடைசியாக டெஸ்லர், கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜிப்சி குறித்து உற்சாகத்துடன் பேசும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories

Tech |