Categories
அரசியல் மாநில செய்திகள்

“நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவோம்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தி.மு.க எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் அண்மையில் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. அதிலும் குறிப்பாக பொன்முடியின் பேச்சு பல பேருக்கு முகம் சுளிக்கவைத்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என கூறிவிட்டு, பெண்கள் மட்டும் பேருந்தில் ஓசியில் போகிறீர்கள் என்று பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இக்கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடையவேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் துவங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அதை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, அதே லட்சியப் பாதையில் தொடர்ந்து வழி நடத்தி இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளைமீட்டுத் தருகிற இயக்கமாக, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்கிற முனைப்புடன் செயல்படகூடிய இயக்கமாக கட்டியமைத்தார். அவர்களுடைய பாதையில் தான் இந்த திராவிடமாடல் அரசு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூல்நிலையில் நம்முடைய கழகத்தின் நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் கட்சி நிகழ்ச்சிகளிலும் (அல்லது) பொது நிகழ்ச்சிகளிலும் பேசக்கூடிய செய்திகளைத் திரித்து, மறைத்து, வெட்டி, ஒட்டி, மோசடி செய்து வெளியிடக்கூடிய கூட்டத்தின் செயல் தொடர்கிறது.  நமக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது. நமதுகையில் ஆட்சி, மக்கள்நலன் என்ற அரிசியும் பருப்பும் உடைய அகப்பையை வைத்திருக்கிறோம். ஆட்சிப்பொறுப்பு என்கிற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாளவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆகவே இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம்கொடுக்காத அடிப்படையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். அத்துடன் நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி வருவோம். அதை மக்களிடம் கொண்டுசேர்ப்போம்” என கூறியிருந்தார்.

Categories

Tech |