உலகில் ஏற்பட்டிருக்கிற அசுர தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உணவு தேடி மக்கள் சென்ற காலம் போய் வீட்டில் இருந்து ஒரு ஆப்பில் ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கு வந்து பெல் அடித்து உணவை கொடுத்து செல்கின்றார்கள். இதற்காக பல்வேறு உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்து இருக்கிறது இதனால் யார் முந்தி கொடுப்பது என்ற போட்டி எழுந்திருக்கிறது.
இந்த சூழலில் சவுதி அரேபியாவில் முதன்முறையாக ஒரு ஆப்பில்ல் ஆர்டர் செய்தால் பறந்த படி வந்து டெலிவரி செய்து வருகின்றார்கள். இது நேரத்தை மிச்சப்படுத்துவதால் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் இந்த ஆப்பில் உணவு மற்றும் உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்தால் காலை 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஊழியர்கள் பறந்த படி வந்து டெலிவரி செய்து வருகின்றார்கள். இந்த ஆப்பில் முன்கூட்டியே ஆர்டர் செய்து எந்த நேரத்திற்கு வேண்டும் என்ற நேரத்தை குறிப்பிட்டால் டெலிவரி செய்யப்படுகிறது.