அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.இந்நிலையில் அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்நிலையில் ஓபிஎஸ் புதிய தனிக்கட்சி தொடங்க உள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான மோதல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்குவதற்கான தீவிர முயற்சியில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் திருநாவுக்கரசு கூறியுள்ளது அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.