சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன.அங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வகையில் இந்த வருடம் நவராத்திரி விழா நேற்று காலை 5 மணிக்கு தொடங்கியது.வருகின்ற நான்காம் தேதி இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பஜனை வழிபாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில் வருகின்ற ஐந்தாம் தேதி வரை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இரவில் கோவிலில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.அதேசமயம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிக்க கூடாது. ஒருவேளை மழை பெய்தால் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.