Categories
அரசியல் மாநில செய்திகள்

மதுரையில் EPS எனும் புயல்…! தானாக கூடிய கூட்டம்… மெய்சிலிர்த்து போன செல்லூர் ராஜீ …!!

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராஜன் செல்லப்பா அற்புதமாக உரை நிகழ்த்தினார். எங்கள் ஆட்சியில் என்னென்ன செய்தோம் ? என்னென்ன திட்டங்களை முதலமைச்சர் கொடுத்தார் ? வரும்போது எல்லாம் ஒரு திட்டங்களோடு வருவார். ஒன்று தொடங்கி வைப்பார், ஒன்று திறந்து வைப்பார் என்று அழகாக சொன்னார். எடப்பாடி எனும் புயல் மதுரையிலே மையம் கொண்டிருக்கிறது என்று ஆர்.பி உதயகுமார் சொன்னார்.

இது மக்கள் எழுச்சி. மக்களுடைய உணர்வுகளை காண்பிக்கின்ற கூட்டம். இது கூட்டப்பட்ட கூட்டம் அல்ல,  தானா சேர்ந்த கூட்டம் இந்த கூட்டம். என்று வந்தாலும் உங்களுக்காக கூட கூடிய கூட்டம் தான் இந்த கூட்டம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் வந்திருக்கிறீர்கள், இன்னைக்கு ஆட்சியா நடக்குது. காட்சி தான் நடக்குது, காட்சிதா நடக்குது. டெய்லி படபிடிப்பு தான்,  போட்டோ ஷூட்டிங்.

நமது முதலமைச்சர் பத்து நாளைக்கு முன்னால வந்தார். நம்முடைய பெருந்தலைவர் காமராஜரும் மக்களோடு அமர்ந்து உணவு சாப்பிட்டிருக்கிறார். நம்ம தலைவர் பொன்மன தலைவன் புரட்சித்தலைவன் சரித்திர நாயகன் அவரும் உணவு சாப்பிட்டு இருக்கிறார்.

அதே மாதிரி நம்ம அம்மா உணவகம் கொண்டு வரும்போது உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் நம்ம முதலமைச்சர் சாப்பிட்டார் பாருங்க… இந்தா இருக்காங்க பாருங்க ஊடகங்கள்…  மதுரைக்காரங்களே குசும்புக்காரர்கள்…  அதோட நம்ம மீடியாக்கள் ரொம்ப குசும்பு பண்ணுவாங்க, நம்மகிட்ட சிரிச்சு, சிரிச்சு பேசிட்டு என்ன சொல்றேன்னு நியூஸ் சொல்லுவாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |