Categories
மாநில செய்திகள்

அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்!…. துணிச்சலுடன் டுவிட் செய்து போராடிய மாணவி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தனியார் நிறுவனத்தில் ஊடகவியல் படிக்கும் ஒரு மாணவி, தன்னை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கடந்த 25 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து தனது தோழியுடன் சோழிங்கநல்லூரிலுள்ள ஹோட்டலுக்கு வந்த போது இச்சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க முயன்றபோது பல மணி நேரமாக தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும், தன் புகாரை போலீசார் அலட்சியப்படுத்தியதாகவும் தன் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அடுத்தடுத்து டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார். அதாவது, அந்த தனியார் ஹோட்டலில் நானும், என் தோழியும் தங்கி இருக்கிறோம். இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து ஊபர் ஆட்டோ வாயிலாக ஹோட்டலுக்கு வந்து இறங்கியபின், என்னுடைய தோழி அந்த ஓட்டுநருக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நான் ஆட்டோவிலிருந்து இறங்க முற்பட்டபோது, ஓட்டுநர் என்னை பாலியல் ரீதியாக சீண்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். ஆனால் அதற்குள் அந்த ஓட்டுநர் தப்பி சென்றுவிட்டார். உடனே நாங்கள் காவல்துறையினரை தொடர்பு கொண்டும், எந்த பதிலுமில்லை என முதலவர் மு.க.ஸ்டாலின், விஜயகுமார் ஐபிஎஸ் போன்றோரை டுவிட்டில் டேக் செய்துள்ளார். அதன்பின் புகாரளித்து அரைமணி நேரத்திற்கு பின், இன்ஸ்பெக்டரும் மற்றொருவரும் ஹோட்டலுக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போது காலையில் வழக்குப்பதிவு செய்வதாகவும், அதுவரை காத்திருக்குமாறும் என்னிடம் கூறினர். போலீஸ் நிலையம் சென்று புகாரளிக்க தங்களை அனுமதி கொடுக்கவில்லை.

எனினும் 2 ஹோட்டல் பணியாளர்களுடன் நாங்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்றோம். அப்போது அங்கு இருந்த காவல்துறையினர்  என்னை போலீஸ் நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வெளியே நின்று நான் புகாரை எழுதிக் கொடுத்தேன். அதன்பின் மறுநாள் காலை 9 மணியளவில் மகளிர் காவல்துறையினரை சென்று சந்திக்கும்படி என்னிடம் கூறினர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண், அந்த ஆட்டோ ஓட்டுநரின் பெயர் உட்பட அனைத்து விவரங்களையும் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி நான் அவனை பார்த்து கத்தும் போது, அவன் என்னை நோக்கி சிரிக்கும் அளவுக்கு துணிச்சலாக இருந்தான் என அவர் குறிப்பிட்டிருந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவரை தேடி வருவதாகவும் முதல்கட்டமாக, தாம்பரம் போலீசார் ட்விட்டரில் தெரிவித்தனர். மேலும் ஊபர் நிறுவனமும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஆட்டோ பயணம் பற்றிய விவரங்களை கேட்டுள்ளது. இந்நிலையில்  நேற்று (செப். 26) இரவு 8.30 மணியளவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பிடிப்பட்டதாகவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |