பிரதமர் மோடி பிறந்தநாளை வேலையின்மை தினம் என காங்கிரஸ் கொண்டாடியது குறித்து சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது,
முன்னாள் வேலையின்மைத்தினுடைய தலைவர்கள் எல்லாரும் சேர்ந்து, இந்நாள் வேலையின்மை தினத்திற்கான தலைவரை கொண்டாடுகிறார்கள். அதுக்கு என்ன பெயர் வைக்கிறது ? நான் என்ன சொல்லுவது ? புரோக்கர். இன்டர்நேஷனல் ப்ரோக்கர். அத நான் பலமுறை சொல்லிட்டேன்.
என்னைக்கு தனியார் மைய தாராள மைய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்ட நாட்டின் தலைவர்கள், சொந்த நாட்டு மக்களுக்கு தலைவராக இருந்து சேவை செய்ய முடியாது. உள்நாட்டு, வெளிநாட்டு பெரு முதலாளிகளுக்கு, சொந்த நாட்டு மக்களுக்கு, முதலாளிகளுக்கும் இடையே இருந்து தரகு வேலை தான் செய்ய முடியும்.
அந்த வேலையை தான் இந்திய நாட்டின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றிருக்கிற தலைவர்கள் செய்ய முடியும். அதுல மோடி இல்ல, மன்மோகன் சிங் இல்ல, நானும் நீங்களும் இருந்தா கூட அதை தான் செய்ய முடியும். அதனால இந்த கொள்கையை மாத்தணும். எந்த கொம்பன் போனாலும் இந்த புரோக்கர் வேலை தான் செய்யணும். இந்த நாட்டின் முதலமைச்சர்கள் என்பவர்கள் ஆல் இந்திய புரோக்கர்ஸ். இந்திய பிரைம் மினிஸ்டர் இன்டர்நேஷனல் புரோக்கர் அவ்வளவு தான் என தெரிவித்தார்.