தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து, கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த கால ஆர்எஸ்எஸ் அணுகுமுறையை பெட்ரோல் குண்டு வீச்சோடு ஒப்பிட்டு பேசுகிறார். இந்த நிலையில் திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று எச் ராஜா பேசி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று அடுத்தடுத்து மூன்று ட்விட்களை பதிவிட்டார். அதில், 24 காஷ்மீர் இந்துக்களை நானே கொன்றேன் என்று பகிரங்கமாக கூறிய கொலைகாரன், பயங்கரவாதி, பாக்கிஸ்தான் கைகூலி யாசின்மாலிக் கை தமிழகத்திற்கு அழைத்து வந்து கூட்டம் போட்ட தேசவிரோதி சீமான் ஆர்.எஸ்.எஸ் பாஜக போன்ற நாட்டை நேசிக்கும் அமைப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பதா?நாவடக்கம் தேவை என சீமானை எச்சரித்துள்ள எச்.ராஜா,
பயங்கரவாதி மதானியின் சேவகன் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் ஐ விமரிசிப்பது வேடிக்கைதான். காலக் கொடுமை என திருமாவளவன் போட்டோ பதிவிட்டுள்ளார். 3ஆவதாக பதிவிட்ட ட்விட்டரில், தமிழகம் அமைதிப் பூங்காவா? இனவெறி தூண்டப்பட்டு ராஜிவ் கொல்லப்பட்டது எங்கே? EPRLF பத்மநாப 14 பேருடன் கொல்லப்பட்டது தமிழகத்தில்தானே? கோவை தொடர் குண்டு வெடிப்பில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 60 பேர் உட்பட 200 பேர் இஸ்லாமிய மதவெறிக்கு தமிழகத்தில் பலி ஆகவில்லையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகம் அமைதிப் பூங்காவா? இனவெறி தூண்டப்பட்டு ராஜிவ் கொல்லப்பட்டது எங்கே?
EPRLF பத்மநாப 14 பேருடன் கொல்லப்பட்டது தமிழகத்தில்தானே? கோவை தொடர் குண்டு வெடிப்பில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 60 பேர் உட்பட 200 பேர் இஸ்லாமிய மதவெறிக்கு தமிழகத்தில் பலி ஆகவில்லையா?— H Raja (@HRajaBJP) September 26, 2022
பயங்கரவாதி மதானியின் சேவகன் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் ஐ விமரிசிப்பது வேடிக்கைதான். காலக் கொடுமை. pic.twitter.com/WgjRWCZdzR
— H Raja (@HRajaBJP) September 26, 2022
24 காஷ்மீர் இந்துக்களை நானே கொன்றேன் என்று பகிரங்கமாக கூறிய கொலைகாரன், பயங்கரவாதி, பாக்கிஸ்தான் கைகூலி யாசின்மாலிக் கை தமிழகத்திற்கு அழைத்து வந்து கூட்டம் போட்ட தேசவிரோதி சீமான் ஆர்.எஸ்.எஸ் பாஜக போன்ற நாட்டை நேசிக்கும் அமைப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பதா?நாவடக்கம் தேவை. pic.twitter.com/3WKyp3ZG0N
— H Raja (@HRajaBJP) September 26, 2022