இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து சில அரசியல் வசனங்களை நீக்கி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இத்திரைப்படத்தில் இருந்த சில அரசியல் வசனங்களை சங்கர் நீக்கி விட்டதாக செய்தி வெளியாகிருக்கின்றது. தொடக்கத்தில் அரசியல் வசனங்கள் பல இடம்பெற்றதாகவும் இதன் பின்னர் உதயநிதி திரைப்படத்தை வாங்கியதால் சில அரசியல் வசனங்களை நீக்கி விட்டதாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றது.