Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹோட்டல்ல தங்குனபோது…… “என் பணம், நகையை காணோம்”…. எங்கே?…. இந்திய கிரிக்கெட் வீராங்கனை அதிர்ச்சி புகார்..!!

இந்திய மகளிர் பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் பாட்டியா தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை திருடி விட்டதாக புகாரளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மகளிர் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் இழந்தது.. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டியிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை வென்ற நிலையில், கடைசியாக லண்டனில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இப்போோட்டியில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை தீப்தி சர்மா மன்கட் முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஐசிசி விதிமுறையில் இருப்பதை தான் அவர் செய்தார் என்று பலரும் ஆதரவு தெரிவித்தாலும் கூட, கிரிக்கெட் ஆன்மாவிற்கு எதிரானது என தீப்திக்கு  ஒரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.. இந்த சர்ச்சையே இன்னும் அடங்குவதற்குள் புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.

அதாவது, இந்திய மகளிர் பெண்கள் அணியின் விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை திருடி விட்டதாக ட்விட்டரில் கடும் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், மேரியட் ஹோட்டலில் லண்டன் மைடா வேல் நிர்வாகத்தால்  அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் நான் சமீபத்தில் தங்கியிருந்தபோது எனது தனிப்பட்ட அறைக்குள் ஒருவர் நுழைந்து பணம், கிரெடிட் கார்டு, கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளுடன் எனது பையைத் திருடிவிட்டார், மேரியட்  பாதுகாப்பற்றது என்றார்.

மேலும் இந்த விவகாரத்தில் விரைவான விசாரணை மற்றும் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமான ஹோட்டல் பார்ட்னரில் இதுபோன்ற பாதுகாப்பு இல்லாமல் இருப்பது என்னை பிரமிக்க வைக்கிறது. இதன்மூலம் அவர்களும் இதைப்பற்றி அறிந்து தெளிவு பெறுவார்கள் என்று நம்புகிறேன் என்று  மேரியட் ஹோட்டல் பிசிசிஐ, பிசிசிஐ பெண்கள் ட்விட்டரை டேக் செய்துள்ளார்..

Categories

Tech |