நானே வருவேன் திரைப்படத்தின் ரிவ்யூ குறித்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது.
மேலும் இத்திரைப்படம் வெளியாகிய அடுத்த நாளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் நானே வருவேன் திரைப்படத்திற்கு முன்பதிவு வரவேற்பு கொஞ்சம் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்தின் முதல் ரிவ்யூ குறித்த புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது. அதில் நானே வருவேன் திரைப்படம் இந்த வருடத்தின் சிறந்த திரில்லர் படத்தில் ஒன்று. தனுஷ் சிறப்பாக நடித்திருக்கின்றார். விருது நிச்சயம் என்ன ஸ்டார்ஸுடன் ரிவ்யூ ஒருவர் போட்டிருக்கின்றார். இந்த நபர் ஏற்கனவே பல சுமாரான திரைப்படங்களுக்கு இதே போல் புகழ்ந்து ரிவ்யூ கொடுத்திருக்கின்றார். ஆகையால் இத்திரைப்படம் வெளியாகும் வரை பொறுத்து இருப்போம்.